தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம்:! தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு!

Photo of author

By Pavithra

தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம்:! தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில்,திருப்பதி கோவிலில்,ஏழுமலையானை தரிசிக்க மக்கள் கூட்டம் அலை மோதும்.அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் புரட்டாசி மாதத்தில் திருப்பதி செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்கவிருக்கும் நிலையில்,ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,புரட்டாசி மாதத்தில்,பாதயாத்திரையாக அல்லது வேறு பயண வடிவிலோ பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக, தேவஸ்தான அதிகாரிகள் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

மேலும் விசாரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அடுத்த மாதம் அக்டோபர் 18-ம் தேதி வரையில்,பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க வேண்டுமெனவும், கொரோனாத் தொற்று குறைந்தவுடன் திருப்பதிக்கு வருமாறும்,தமிழக பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.