விரைவில் தேர்தல்! தமிழக தேர்தல் ஆணையம் விறுவிறு ஏற்பாடு!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை தொடர்ந்து 9 2300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக இறங்கி வருகிறார்கள். அதே சமயத்தில் தமிழகத் தேர்தல் ஆணையமும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றது.

அந்தவிதத்தில், தேர்தலில் வாக்களிக்க பயன்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதித்து தேர்தலுக்கு தயார் செய்யும் பணி தற்சமயம் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அதன் முதல் கட்டமாக தேர்தலுக்கு பயன்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முன்னரே செலுத்தப்பட்ட வாக்குகளின் பதிவுகள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தும் விதமாக தயார் நிலையில் இருக்கின்றதா ?என்பது தொடர்பான முதல்கட்ட சோதனை செய்யப்படும் இது குறித்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகின்றது.

தற்சமயம் வரையில், 26 மாவட்டங்களில் இருக்கின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை முற்று பெற்று இருப்பதாகவும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு 92 ஆயிரத்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்து தற்சமயம் தயார் நிலையில் இருப்பதாகவும் தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் எதிர்வரும் பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை நிறைவுபெற்று தயார் நிலையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.