TNEB:புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது தமிழக மின் வாரியம்.
புதிதாக மின் இணைப்பு வாங்க முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மின் வாரியம் மின் இணைப்பு வழங்கி வந்தது, இந்த முறையில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்த நாட்கள் முதல் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். இதனை சரி செய்யும் வகையில் புதிய முறையை கொண்டு வந்துள்ளது மின் வாரியம்.
அந்த அறிவிப்பில் இனி மின் இணைப்பு பெற அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே ஆகும் என்றும், கடை உட்பட தாழ்வழுத்த பிரிவில் குறைந்த பட்சம் மின் இணைப்பு பெற 3 நாட்கள் மட்டுமே ஆகும். மேலும் கூடுதலாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்றார் மின் இணைப்பு பெற 7 ஆகும். இந்த அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வர உள்ளது.
மேலும் மேல் நிலை மின் கேபிள்கள் மற்றும் நிலத்தடி மின் கேபிள்கள் பராமரிக்க வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளது என பயனர்கள் நுகர்வோர் புகார் அளித்துள்ளார்கள். அதை சரி செய்யும் வகையில் அதற்கான கட்டணம் குறித்து வசூலிக்கப்படும். இதை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இதை மின் வாரியத்திடம் தெரிவித்துள்ளது.
மேலும் மின் இணைப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அதிகமாக மின் கேபிள்களை பராமரிக்க கட்டணம் வசூல் செய்தால் மின்வாரிய நுகர்வோர் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.