சின்னத்திரை படப்பிடிப்பிற்கு நாளை முதல் அனுமதி

0
121

கொரோனா தொற்று காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கச் சொல்லி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளார்.

படப்பிடிப்பின் போது பின்பற்றவேண்டிய கட்டுப்பாடுகள்:

• Indoor படப்பிடிப்பிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
• தடைசெய்யப்பட்ட பகுதியில் படப்பிடிப்பிற்கு அனுமதி கிடையாது.
• படப்பிடிப்பு வெவ்வேறு மாவட்டங்களில் இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையான அனுமதி பெற்ற பின்பே படப்பிடிப்பு எடுக்க வேண்டும்.
• நடிகை நடிகைகள் தவிர மற்ற கலைஞர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
• நடிகை நடிகைகளும் இடைவேளையின் போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.
• சின்னத்திரையில் அனைவரும் குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
• இவர்கள் அனைவரும் அடிக்கடி சோப்பினால் கைகளை கழுவ வேண்டும்.
• படப்பிடிப்பு எடுக்கப்படும் வீட்டைச் சுற்றி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கிருமிநாசினி கட்டாயம் தெளிக்க வேண்டும்.
• ஒரு சீரியல் படப்பிடிப்பில் 20 பேர் மிகயாமல் இருக்கலாம் என்று அரசு அனுமதித்துள்ளது.

இவ்வாறு பல நிபந்தனைகளுடன் நாளை சின்னத்திரை படப்பிடிப்புகளை ஆரம்பிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Previous articleசிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன் – மருத்துவமனையில் கொரோனா நோயாளி செய்த அட்டகாசம்
Next articleபாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! மருத்துவர் ராமதாஸ் பெருமிதம்