குடும்ப அட்டையை இனி இப்படியும் பெறலாம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

Photo of author

By Sakthi

குடும்ப அட்டையை இனி இப்படியும் பெறலாம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

Sakthi

Updated on:

தமிழ்நாட்டில் புதிதாக மின்னணு குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளலாம் இது தற்போதுள்ள நடைமுறையாக இருக்கிறது.

ஆனாலும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் தபால் மூலமாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும் விதத்தில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்த திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் தொடர்பாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது இணையவழியில் அட்டை கட்டணம் 20 ரூபாய் மற்றும் தபால் கட்டணம் 25 ரூபாய் என 45 ரூபாய் கட்டணமாக, வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தபால் மூலமாக புதிய குடும்ப அட்டை நகல் அட்டை உள்ளிட்டவற்றை தபால் மூலம் பெற விரும்பாதவர்களுக்கு தற்போதைய நடைமுறையினடிப்படையில், குடும்ப அட்டை தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.