பரோலை மேலும் நீடித்த தமிழக அரசு! காரணம் இதுதானாம்!

Photo of author

By Hasini

பரோலை மேலும் நீடித்த தமிழக அரசு! காரணம் இதுதானாம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர்தான் பேரறிவாளன். 49 வயதான இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றின் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், எனவும், மேலும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள், கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை ஒன்றை விடுத்தார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி  வழங்கியது. இதன்படி கடந்த மே 28ஆம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பேரறிவாளன் அங்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இதனை அடுத்து ஒரு மாத காலம் முடிந்து பேரறிவாளன் கடந்த ஜூன் மாதம் சிறைக்கு திரும்பும் போது மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு வழங்கியது.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பரோல் முடிந்துள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றுடன் பரோல் முடிவடையும் நிலையில், பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்ற அரசு அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீடிப்பதாகவும் தமிழக அரசு நேற்று அறிவித்தது.