தமிழகத்திலிருக்கின்ற ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு இதுவரையில் 1000 ரூபாய் செலவு செய்ய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 5000 ரூபாய் வரையில் செலவு செய்து கொள்ளலாம் என்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
கிராம சபை சிறப்பு கிராம சபை நடைபெறும் தினங்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியிலிருந்து இந்த செலவுகளை செய்யலாம் என்று ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என்றும், சொல்லப்படுகிறது.