கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவு!!

Photo of author

By Sakthi

Tamil Nadu Govt: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு.

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்” உருவாக்கப்பட்டது. இதன் வாயிலாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்குகிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக 05.09.2022 அன்று செயல்படுத்தப்பட்டது. 2-ஆம் கட்டமாகவும்  கடந்த ஆண்டு 08.02.2023 தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு இதுவரை ரூ. 698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது வரை “புதுமைப் பெண் திட்டம்” கீழ் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள்.  இந்த நிலையில் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. அதாவது, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று அதன் பிறகு  உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு முடிவு.

அதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் டிசம்பர்-30 ஆம் தேதி தூத்துக்குடியில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இது  தொடர்பாக நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மற்றும்  ஜெயஸ்ரீ முரளிதரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆகியோர் பங்கு பெற்றார்கள்.

அதில்,  புதுமைப் பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்தால் அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் முதல், இரண்டாம், இறுதி ஆண்டு மாணவிகளுக்கு உதவித் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுவதை உறுதி செய்தார்கள்.