TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்!! அதிகரிக்கும் பணியிடங்கள்!!

Photo of author

By Sakthi

TNPSC :குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு பணிக்கான தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது . இதில் குறிந்த பணியிடங்களுக்கு அதிக தேர்வர்கள் போட்டி போடுகிறார்கள். என்றகுற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதை பூர்த்தி செய்யும் விதமாக ஒவ்வொரு துறையிலும் பணிகளின் எண்ணிக்கைகளை உயர்த்தி வருகிறது NPSC தேர்வாணையம்.

அந்த வகையில், TNPSC தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கு காலிப்பணியிடங்களை உயர்த்தி உள்ளது.  அதாவது குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கு முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்கள், குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.

தமிழகத்தில் மொத்தம்  7,93,947 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். இத் தேர்வு தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் நடைபெற்றது.இந்நிலையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இன்று உயர்த்தியுள்ளது தமிழக அரசு. மேலும் group 4 தேர்வர்களுக்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கடந்த ஜூன் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்தார்கள்.  மொத்தம் 8,932  எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களை அறிவித்து இருந்தது TNPSC தேர்வாணையம். தேர்வு முடிந்த நான்கு மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு , அதற்கான கலந்தாய்வு தேதியையும் அறிவித்தது இருந்தது  TNPSC தேர்வாணையம்.

மேலும் தேர்வர்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக குரூப்-2 பதவிகள் எண்ணிக்கை அதிகரித்து  இருப்பது மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது