தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தன்னார்வலர்களுக்கு மே மாதம் முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் நோய் தொற்று பரவல் காரணமாக, 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் இணையதளத்தின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டனர்.
இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. அந்த குறைபாட்டை நீக்கும் வகையில், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இல்லம் தேடி கல்வியை திட்டத்தை அரசு அறிமுகம் செய்து வைத்தது.
இந்தத் திட்டத்தின் மூலமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் வீடு தேடிச் சென்று தன்னார்வலர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள். இதற்காக மாநில அளவில் 11,000 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஊக்கத்தொகை மே மாதத்திலிருந்து தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவில்லை. தன்னார்வலர்கள் இது தொடர்பாக தெரிவித்ததாவது, சேவை மனப்பான்மையில் தான் இந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் அரசு உறுதியளித்த ஊக்கத்தொகையை மே மாதத்திலிருந்து வழங்கவில்லை. அவற்றை சரியான சமயத்தில் வழங்காமல் தாமதம் செய்வது எந்த விதமான நியாயமும் அல்லாதது என்று தெரிவித்து வருகிறார்கள்.