கோயமுத்தூர் மாவட்டத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்த தமிழக அரசு!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்து வருகிறது. சென்னையில் அதிக அளவில் ஏற்படும் நோய்த் தொற்றானது தற்சமயம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் அதற்கு மாறாக கோவை மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக, அங்கு தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி நோய் தடுப்பு பணியில் ஈடுபட தற்காலிக செவிலியர்கள் மூன்று மாதத்திற்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் அதற்கு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதற்கு 100 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாத சம்பளத்தில் 12 ஆயிரம் கல்வித்தகுதி பிஎஸ்இ நர்சிங் டிப்ளமோ நர்சிங் உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விருப்பமிருப்பவர்கள் நாளை காலை 10 மணிக்கு கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளுடன் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.