தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டிலிருக்கும் அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களிடம் குறைந்த அளவிலான கட்டணங்களை மட்டுமே வசூல் செய்யவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து வருகிறது.
ஆனாலும் சில அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்தி வாங்குவதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள் மேலும் பெற்றோர்களும் அதில் இருந்து வருகிறார்கள்.
இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கையை வந்ததையடுத்து தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
அதாவது, திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த விதத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
அரசுப் பள்ளிகள் தரமுயர்த்தப்பட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்படுகிறது இந்த சூழ்நிலையில், பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.
அதாவது, கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசின் சார்பாக எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.
அந்த சுற்றறிக்கையில், கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்து தண்டிப்பதாக புகார் வந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இது குறித்து வரும் புகார்கள் மீது தனி கவனம் செலுத்துமாறும் மாவட்ட கல்வி அதிகாரிகளை மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குனர் கருப்பசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.