ரேஷன் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!

Photo of author

By Hasini

ரேஷன் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!

Hasini

Tamil Nadu government issues stern warning to ration shops

ரேஷன் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!

நியாய விலைக் கடைகளில் பணியாளர்களைத் தவிர காணப்படும் இதர வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சில நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களை தவிர, இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாகும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமே உள்ளன.

இதனை தவிர்க்கும் விதமாக கூட்டுறவுத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்க கூடாது, என்றும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏதேனும் பணியாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும் நியாயவிலை கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கும் பட்சத்தில் இது குறித்து காவல் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்களின் மேல் கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்றும் கூறியுள்ளது.

மேலும் வெளிநபர்களை கடையில் அனுமதித்து அவர்களுக்குத் துணைபோகும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மீதும் மேற் குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகும் நியாயவிலை கடைகளில் வெளிநபர்கள் காணப்படுவதாக புகார் பெறப்பட்டால், இதற்கு சம்பந்தப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளர் பொறுப்பு என கருதி அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.