தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!! உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இது தான் கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழக அரசால் பொது மக்களுக்கு வழங்கப்படும் எண்ணற்ற திட்டங்களுள் ஒன்று தான் பொது விநியோகத் திட்டம் ஆகும்.இத்திட்டத்தின் படி அரசு மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குகிறது.அதிலும் அரிசி,எண்ணெய்(பாமாயில்),பருப்பு,சர்க்கரை ஆகியவை மக்களின் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் முக்கியத்துவம் பெற்றவை ஆகும்.மேலும் பருப்பு ஒரு கிலோவின் விலை ரூபாய் முப்பதாகவும் மற்றும் பாமாயிலின் விலை இருபத்தைந்து ரூபாய் எனவும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்த பொருட்களை பெற மாதம் தொடங்கிய அந்த முதல் வாரத்திலேயே வாங்குவதற்கு மக்களின் கூட்டம் முண்டியக்கும்.எனவே ரேஷன் கடைகள் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படும்.இந்த நிலையில் தான் கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை என பொது மக்கள் பலர் கூறி வந்தனர்.இதற்கான காரணமாக சொல்லப்படுவது, சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 18ஆவது மக்களவை தேர்தல் தான்.
ஏனெனில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ரேஷன் பொருட்கள் ஆர்டர் செய்து எடுத்து வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டதாக தமிழக அரசு சட்ட சபையில் தெரிவித்துள்ளது.ஆனால் தற்போது இந்த இரண்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இனி வரும் ஜூலை மாதம் முழுவதும் சென்று குடும்ப அட்டைதாரர்கள் வாங்கி கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் கூறியுள்ளார்.இது பொது மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.