தற்காலிக கிராம உதவியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

0
6

தமிழக அரசு சார்பாக கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

அதில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், மதிப்பெண் விவரங்கள், மற்றும் தேர்வு முறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பணிக்காக தகுதி மற்றும் தேர்வு முறை என்று பார்க்கும் பொழுது தமிழ் ஒரு பாடமாக தேர்வு எழுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதற்காக பத்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஓட்டும் திறன் கொண்டவராகவும் ஓட்டுனர் உரிமம் இருந்தால் நேரடியாக 10 மதிப்பெண்கள் இல்லையெனில் தேர்வின் மூலம் திறன் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழில் வாசித்து, எழுதும் திறன் கொண்டிருந்தால் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட கிராமம் அல்லது குறைந்தபட்சம் தாலுகாவில் வசிப்பவர்களுக்கு வசிப்பிடச் சான்றிதழ் இருந்தால் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு நேர்காணல் நடத்தப்படும். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நடத்தும் நேர்காணலில் அடிப்படையில் 15 மதிப்பெண்கள் SSLC தேர்ச்சி இல்லாதவர்களுக்கும் வாசிக்கும் எழுத்துத்திறனை நிரூபித்தால் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்காலிகமாக கிராம உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் இந்த புதிய உத்தரவை நிரந்தர அரசு பணிக்காக வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇனி தட்டச்சு தேர்வு இப்படித்தான் நடக்கும்; ஆசிரியர்கள் தலையில் இடியை எறக்கிய தமிழக அரசு!!
Next articleஅதிமுக வுக்கும் நமக்கும் 50- 50 தொகுதி.. பிளானை உடனே மாத்துங்க!! மோடிக்கு ஐடியா கொடுத்த அண்ணாமலை!!