கலைஞர் கனவு இல்லத் திட்டம்!! ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழக அரசு  நடவடிக்கை!!

Photo of author

By Sakthi

TAMILNADU:முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் வாயிலாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழக அரசு  திட்டம்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பாதுகாப்பாக வசிக்க வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்து வருகிறது. மேலும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி ரூ.3500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டும் என்ற இலக்கை செயல்படுத்தி வருகிறது. அதற்காக ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் ஊரக வீடுகள் சீரமைத்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II என ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2024-25 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இதன் மூலம் ஒரு புதிய  கான்கிரீட் வீட்டிற்கு ரூ.3,50,000/- வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளுக்கு சுமார் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயன் பெறுவர்கள் நான்கு தவணைகளாக அவர்களின் வங்கி கணக்கிற்கு தமிழக அரசு செலுத்துகிறது. அதாவது வீட்டின் தரை மட்டம், ஜன்னல் மட்ட நிலை, மேல் கான்கிரீட் தளம், பிறகு  வீட்டின் பணி முடிவுற்ற பின் பயனர்களுக்கு தொகை வழங்கப்படுகிறது. மேலும் வீடு கட்டுவதற்கு  கட்டுமான பொருட்கள் அரசின் ஒப்பந்தம் பெற்ற  விற்பனையாளரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

மேலும் கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.