ITI Students: நம் தமிழக அரசு ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.8000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள், சுய தொழில் புரிய தேவையான நிதியுதவி என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருகிறது.
இந்த நிலையில் ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி முகாம் 11.11.2014 அன்று காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுனராக தேர்வு செய்ய உள்ளனர்.
அதில் தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.8000 மற்றும் தேசிய தொழிற் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இந்த தொழிற் பயிற்சி முடிக்காதவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.