ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று டெல்லி செல்லும் ஆளுநர்! நடுக்கத்தில் ஆளும் தரப்பு!

சமீபத்தில் தமிழக ஆளுநரின் வாகனம் மற்றும் அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக்கொடி மற்றும் கற்கள் உள்ளிட்டவற்றை கொண்டு மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
.

இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆளுங்கட்சியான திமுக சார்பாக நீட்தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அந்த வலியுறுத்தலை ஆளுநர் பெரிதாக கருதவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் இதன் காரணமாக, ஆளும் கட்சி ஆளுநர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில், சமீபத்தில் ஆளுநர் வாகனம் மற்றும் அவருடைய பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோரை அவர் சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும், அந்த சமயத்தில் தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக அவர் பேசவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதோடு தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கவேண்டும் என்று நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக அரசின் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

Leave a Comment