தொழில் முனைவோருக்கு தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Jeevitha

TN Government: தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு பல வகையான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தொழில் தொடங்குவதற்கு நிதியுதவி மற்றும் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு நம் தமிழக அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் அரசு தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான மாணவர்களை அரசு பணிக்கு எடுக்கிறது. அது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு வேலைவாய்ப்பை பெறும் வகையில் நம் நாட்டில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் பல்வேறு முடிவுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் சுய தொழில் தொடங்குவதற்காக நிதி உதவி மற்றும் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து நம் தமிழக அரசு சுயதொழில் முனைவோர்களுக்கு சந்தைபடுத்தும் முறை, தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், உணவு தயாரிக்கும் பொருட்கள், வீட்டு இரசாயன பொருட்கள், மற்றும் செய்முறை பயிற்சிகள் தொடர்பான அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இதற்கான கடன் உதவி தொகையும் அளிக்கிறது.

இதற்கான பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம்  சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின்  கட்டிட வளாகத்தில் 13.11.2024 முதல் 15.11.2024 வரை நடைபெறுகிறது. இதற்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும், வயது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள். இதனை முன்பதிவு செய்ய www.editn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 8668100181 மற்றும் 9841336033 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.