ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்!

Photo of author

By Hasini

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெலிங்டன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. மிகுந்த பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், முதலில் நான்கு பேரின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.

அதில் மூன்று பேர் மிகவும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்கள் கிடைத்தன. அதையடுத்து அதில் பயணம் செய்த 10 பேரும் உடல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்தன. அதன் பிறகு அதில் இராணுவ படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உட்பட 14 பேர் பயம் செய்துள்ளனர்.

ஆனால் தற்போது அதில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட ராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்துவிட்டனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

ஒரு மிகவும் துயர சம்பவம் என்று பலரும் வேதனை தெரிவித்து வந்த நிலையில், இது பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அது ஒரு உயர் ரக விமானம் என்றும் அது எப்படி விபத்துக்குள்ளானது என்றும் பலரும் பலவிதமான கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மற்றும் சக வீரர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வெலிங்டன் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அந்த மைதானத்தில் அவர்களது உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி மற்றும் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை உயர் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளும் மலர் வளையம் வைத்து ஆழ்ந்த அநுதாபங்களையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.