பயங்கரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய கடமை தமிழக காவல்துறைக்கு இருக்கிறது!

Photo of author

By Sakthi

பயங்கரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய கடமை தமிழக காவல்துறைக்கு இருக்கிறது!

Sakthi

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதாவது திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் அன்றாடம் 1 ,2 என இருந்த கொலை சம்பவங்கள் தற்போது 8 முதல் 10 கொலைகள் என்ற நிலை வந்துவிட்டது. சமீப காலமாக பெட்ரோல் கொண்டு வீச்சு கலாச்சாரம், வன்முறை கலாச்சாரம் தலைவிரித்து.

கோவை மாவட்டம் கோட்டைமேட்டில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று முன்தினம் கார் ஒன்று வெடித்து சிதறி ஒருவர் பலியானார். இதற்கு காரணம் காஸ் சிலிண்டர் என்று தெரிவிக்கப்பட்டாலும் காருக்குள் இருந்தவர் காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் இருந்ததாக செய்திகள் வந்திருக்கின்றன.

இறந்து போன நபர் இதற்கு முன்னர் தேசிய உளவுத்துறை முகமையான என் ஐ ஏவால் விசாரிக்கப்பட்டதாகவும், அவருடைய வீட்டில் வெடிகுண்டுகள், பொட்டாசியம், நைட்ரேட், அலுமினிய துகள்கள், மரக்கறி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

டிஜிபி நேரில் சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது. இது திமுக ஆட்சியில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு செய்த சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம்.

சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு அதிமுக சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக காவல்துறைக்கு இருக்கிறது.

முதலமைச்சர் உடனடியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி தமிழக மக்களை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.