Dindigul:வத்தலகுண்டு அருகே இரவு நேரத்தில் கண்மாயில் சிக்கிய மாற்றுத்திறனாளியை மீட்ட தமிழக காவல்துறை.
கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்த பரசுராமர். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். மேலும் பரசுராமர் கர்நாடகாவில் இருந்து சபரிமலைக்கு தனது மூன்று சக்கர வாகனத்தில் செல்ல புறப்பட்டு தமிழகம் வழியாக செல்ல வந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் கூகுள் மேப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் தான் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில் இரவு நேரத்தில் கூகுள் மேப் காட்டிய வழியை நம்பி சென்று இருக்கிறார். இந்த பாதையில் இருந்த சேற்றில் அவர் மாட்டிக் கொண்டார். மேலும் அக்கம்பக்கத்தினர் அவர் சேற்றில் மாட்டிக் கொண்டு இருப்பதை போலீசாரிடம் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வத்தலகுண்டு போலீசார் சேற்றில் மாட்டிக் கொண்டு இருந்த பரசுராமர் மற்றும் அவரது மூன்று சக்கர வாகனத்தை மீட்டனர். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் சபரிமலைக்கு செல்ல கூகுள் மேப் பயன்படுத்தி சேற்றில் மாட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
பரசுராமர் இரவு 7 மணியளவில் சேற்றில் மாட்டிக் கொண்டு இருக்கிறார். அப்போது மழை பெய்து கொண்டே இருப்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை இதனால் அவர் இரவு 2 மணியளவில் வத்தலகுண்டு போலீசார் உதவி செய்து மீட்டு இருக்கிறார்கள்.மேலும் அவரை கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இந்த செய்தியை அறிந்து கர்நாடக போலீசார் தமிழக போலீசாருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.