தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல.. தேர்தல் ஆணையம் தகவல்!!

0
149
Tamil Nadu Vetri Kazhagam is not a recognized party.. Election Commission Information!!
Tamil Nadu Vetri Kazhagam is not a recognized party.. Election Commission Information!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு  ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், அக்கட்சிக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்த வண்ணம் உள்ளது. 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரங்களையும் தொடங்கிய விஜய், தனது 5 வது மக்களை சந்திப்புக்கு கரூரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

இதனால் விஜய்க்கு ஆதரவு குறையும் என்று எதிர்பார்த்த சமயத்தில், விஜய்க்கு முன்பு இருந்தது விட ஆதரவு பெருகியது. அதே சமயம் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பும் உண்டானது. இதனை தொடர்ந்து கரூர் சம்பவம் 4 நாட்களுக்கு முன்பு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில்,  வழக்கறிஞர் செல்வகுமார் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் விஜய் மற்றும் தவெகவினரின் கவன குறைவினாலும், முறையான முன்னேற்பாடு இல்லாததாலும் 41 உயிர்கள் பறிபோயுள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்த வாலிக்கு முடியும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்க கூடாது என்றும், விதிகளை மீறிய தவெக வின் அங்கீகாரத்தை ரத்து தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீ வஸ்தவா மற்றும் ஜி.அருள் முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, தமிழாகி வெற்றிக் கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், அந்த கட்சியின் அங்கீகாரத்தை  செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுப்ப முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டிருந்தது. 

Previous articleபாமக-பாஜக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டிய அன்புமணி.. அப்போ ராமதாஸின் நிலைப்பாடு!!
Next articleயாருமே வேண்டாம்.. ஆள விடுங்க.. விஜய்யின் இறுதி முடிவு.. ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்டா இருக்கே!!