விஜய்யின் நெக்ஸ்ட் டார்கெட்!! தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்!! உற்சாகத்தில் தவெக தொண்டர்கள் !!

Photo of author

By Sakthi

Politics: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார், தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய்.

முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.கடந்த மாதம் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி சாலையில் (27-10-2024) அன்று நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து பல லட்ச கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தவெக மாநாட்டினை வெற்றி பெற செய்தனர். மேலும் விஜய் அவர்கள் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு குறித்து இந்த மாநாட்டில் பேசி இருந்தார். தவெக கட்சியின் நோக்கம் என்ன?, அரசியல் எதிரி யார்? கொள்கை எதிரி யார்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மாநாட்டில் விஜய் நிகழ்த்திய உரை இருந்தது.

விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு ஆதரவு என பல விமர்சனங்கள் அரசியல் கட்சி தலைவர்களால் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் டிசம்பர்-27 விஜய் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து தனது சுற்று பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறார்.

இது குறித்து நாளை சென்னை ,பனையூரில் உள்ள தவெக தலைமை செயலகத்தில் கட்சி நிர்வாகிகள் முடிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்த கூட்டத்தில் விஜய் பேச இருக்கிறார்.