தமிழ் புத்தாண்டு 2025..!! இந்த ஐந்து ராசிகாரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு..!!

Photo of author

By Janani

தமிழ் புத்தாண்டு 2025..!! இந்த ஐந்து ராசிகாரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு..!!

Janani

இந்த வருட சித்திரை 1 தமிழ் வருட பிறப்பானது, விசுவாசுவ தமிழ் புத்தாண்டு என்று கூறப்படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டானது ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்க உள்ளது.ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகும் நிலையில், விசுவாசுவ வருடம் பிறக்கும். இதனால் ஏற்படும் யோகங்கள் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.

சூரியன் மற்றும் மேஷம் ராசி ஆகிய இரண்டுமே நெருப்பின் அம்சம் கொண்டவை. இத்தகைய சூழ்நிலையில் வலுவாக மேஷம் ராசியில் சூரியன் அமர்ந்திருப்பதால், ஒரு குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளையும், செல்வ செழிப்பையும் கொடுக்கப் போகிறார். அந்த அதிர்ஷ்டத்தை பெறப் போகிற ஐந்து ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து தற்போது காண்போம்.

1. ரிஷப ராசி:

ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன் மிகவும் சுப ஸ்தானத்தில் இருப்பார். உங்கள் பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். திடீர் வருமான உயர்வையும் காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் எதிரிகள் தோல்வியடைவார்கள். வாழ்க்கையில் சில பெரிய வெற்றிகளை அடைவீர்கள்.

2. கடகம் ராசி:

கடக ராசியினருக்கு கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி பெறும். தனியார் வேலை செய்பவர்களுக்கு சூரியனின் தாக்கத்தால் பெரிய வாய்ப்பு கிடைக்கும். அதிகாரமும் பதவியும் பெறுவீர்கள். உங்களுக்குப் புகழும் நிறையப் பணமும் கிடைக்கப் போகிறது. கடந்த சில மாதங்களில் உங்களின் கடின உழைப்பின் பலனை இப்போது பெறுவீர்கள்.

3. துலாம் ராசி:

துலாம் ராசிக்கு சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருப்பார். உங்கள் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். கடந்த சில நாட்களாக திருமண வாழ்க்கையில் பதற்றம் நிலவி வருகிறது. இப்போது அது முடிவடையும். வருமானத்தை பெருக்குவதில் வெற்றி பெறுவீர்கள்.

4. மகரம் ராசி:

மகர ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம் என ஆடம்பரம் மட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயமும் கிடைக்கும். வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் வாங்கலாம். வேலையில் இருப்பவர்களின் செயல்பாடு முன்பை விட சிறப்பாக இருக்கும். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இந்தக் காலத்தில் சிறப்புப் பலன்களைப் பெறலாம்.

5. கும்பம் ராசி:

கும்ப ராசிக்காரர்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். உங்கள் பொழுதுபோக்குகள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் துணிச்சலான முடிவுகளால் ஆதாயமடைவீர்கள். தடைபட்ட காரியம் அனைத்தும் நிறைவேறும். பண வரவு மூலம் பொருளதார நிலை உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.