டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்! கோலிக்கு ஏற்பட்ட சறுக்கல்!

0
144

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்றுமுன்தினம் வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 901 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் 890 ஒரு புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், லபுசேன் 878 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறார்கள்.

நாட்டிங்காமில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைசதம் மற்றும் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 846 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்து இருக்கின்றார்.இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 794 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கி சென்றிருக்கிறார். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 264 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 746 புள்ளிகள் பெற்று 7வது இடத்திலும், இருக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 908 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 856 புள்ளிகள் பெற்று 2 இடத்திலும் நீடித்து வருகிறார்கள்.இங்கிலாந்து நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தையும், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டு 9வது இடத்தையும், பிடித்து இருக்கிறார்கள்.

Previous articleவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி! 217 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!
Next articleஅதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் – திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி