பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.இந்த வழக்கில் தனது மகனை சம்பந்தமில்லாமல் கைது செய்திருப்பதாக கொலையாளியின் தந்தை காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த கொடுமையான சம்பவத்தையடுத்து பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வழக்கம் போல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் இந்த கொலைக்கு ஒரு சில அமைப்பினரால் நடத்தப்படும் நாடக காதலே காரணம் என்றும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையில் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் அமைப்பையோ அல்லது தலைவர்களையோ குறிப்பிடாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் தன்னை சம்பந்தமில்லாமல் அந்த கொலை வழக்குடன் இணைத்து பேச கூடாது என்று அந்த அறிக்கைக்கு பதில் அளித்திருந்தார்.மீறினால் மான நஷ்ட வழக்கு தொடர போவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இந்த கொலையானது அந்த பெண்ணின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஆணவ கொலையாக கூட இருக்கலாம் என காவல் துறையினரின் விசாரணையை திசைதிருப்பும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குற்றவாளியே அந்த கொலையை தான் தான் செய்ததாக வாக்குமூலம் அளித்தது உண்மையை உறுதி செய்தது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு கொலையாளியை காப்பாற்றும் வகையில் அவனுக்கு ஆதரவாக கொலையை திசை திருப்ப முயன்றது மக்கள் மத்தியில் உறுதியானது. இதற்கு முன்பே திருமாவளவன் அவரது கட்சி பொது கூட்டத்தில் மற்ற சமுதாய பெண்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த கட்சி இளைஞர்களுக்கு தவறான வழியை காட்டும் வகையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு தலித் இளைஞர்களே காரணமாக இருப்பதற்க இவரின் அந்த தவறான வழிகாட்டுதலே காரணம் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இவரை எதிர்த்து பதிவிடும் பெரும்பாலோனோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றே கோரிக்கை வைக்கின்றனர்.
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய கூறி சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளில் சில உங்களின் பார்வைக்காக