தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அலுவலகங்களிலும் தமிழர்களை விட வட இந்தியர்களையே அதிகம் பணியமர்த்தபடுவதாக, குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணமே இருக்கின்றது.அந்த வகையில் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற் சாலையில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் Grade-3 தொழில்நுட்ப பணியாளர்கள் நியாமனம் செய்ததில், 540 பணியாளர்களில் 15 பேர் மட்டுமே தமிழர்கள் என தெரியவந்துள்ளது.இதனால் இந்த பணி நியமன ஆணைகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,தமிழக அரசு பணிகளில்,திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் என்றும்,மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழகத்தில் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்றும்,மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
https://twitter.com/VelmuruganTVK/status/1294148610716647425?s=08
அதில் அவர் கூறியிருப்பதாவது
“திணிக்காதே திணிக்காதே தமிழக ஒன்றிய பணிகளில் வட இந்தியர்களை திணிக்காதே பறிக்காதே பறிக்காதே ஒன்றிய துறைகளில் தமிழரின் வேலைவாய்ப்பை பறிக்காதே”
ஒன்றிய அரசு தேர்வுகளை தமிழில் நடத்தி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல்,அரசு பணியில் பணியமர்த்த வேண்டும். அவனவன் ஊரில் அவனவன் வாழ்க்கை என்பதும் தமிழ் நெறி தான் என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/VelmuruganTVK/status/1294091276283834369?s=08
மேலும் மற்றொரு பதிவில் பறிபோகும் தமிழர்களின் வேலைவாய்ப்புகளையும், தமிழர்கள்
இழந்த வேலை வாய்ப்புகளையும்
பெற்றுத்தர,வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று ஆக்ரோஷமாக வேல்முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/VelmuruganTVK/status/1293742910630801410?s=08