காஷ்மிர் துப்பாக்கிச்சூடு!.. தமிழர்களின் நிலை என்ன?!. வெளியான தகவல்!..

Photo of author

By அசோக்

காஷ்மிர் துப்பாக்கிச்சூடு!.. தமிழர்களின் நிலை என்ன?!. வெளியான தகவல்!..

அசோக்

kashmir

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

Terrorists enter Kashmir!! Death toll rises to 26!!
Terrorists enter Kashmir!! Death toll rises to 26!!

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இதை அந்த பெண்ணே இராணுவ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ஒருபக்கம், தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் காயமடைந்துள்ளனர். மேலும், 25க்கும் மேற்பட்ட தமிழர்கள் காஷ்மீருக்கு சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர். அவர்களின் நிலை என்ன என்கிற பதட்டம் தமிழகத்தில் எழுந்திருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ‘காஷ்மீர் சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35 சுற்றுலா பயணிகள் ஹரியானா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். அதில் இருவரின் உடல்நிலை சீராக உள்ளது’ என சொல்லியிருக்கிறார்.