பெண்களுக்கு குட் நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்டது சூப்பர் அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

Tamil Nadu Government: தமிழக அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது இலவச அழகுக்கலை பயிற்சி அளிக்கிறது.

நம் தமிழக அரசு இளைய தலைமுறைக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அனைத்து மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன் மூலம் பல லட்சம் இளைஞர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அதேபோல் தமிழக அரசு  இப்போது  அழகுக்கலை பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் Groom India Salon & Spa Private Limited இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கான முக்கிய நோக்கம் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு முதல் தொடங்கும்.

இந்த அழகுக் கலைப் பயிற்சிகள் Beauty Therapy, Ladies Hairdressing, makeup, Barbering போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்லாமல் இதற்கான பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்பட்டு மாத சம்பளம் 16,000 முதல் 20,000 வரை வழங்கப்பட உள்ளது என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான சந்தேகங்கள் அனைத்திற்கும் 8072828762 மற்றும் 9025808570 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

மேலும் இதற்கான பயற்சி அளிக்கப்படும் இடங்கள் ராயப்பேட்டை, பூந்தமல்லி,கொளத்தூர்,திருமுல்லைவாயில்,கோவை,திருநெல்வேலி,மதுரை,வேலூர்,ஆலப்பாக்கம்,விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,ஈரோடு,கரூர், ஏற்காடு போன்ற முக்கிய இடங்களை தேர்வு செய்துள்ளது. மேலும் இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்பு உறுதி செய்யபடுகிறது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அறிவித்துள்ளது.