கொரோனோத் தொற்று காரணமாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிந்து ஜூலை முழுவதும் ஆறாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிவேகமாக தொற்று பரவி வருவதால் கடந்த ஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டது.
தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டின் ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் உரிமையாளர்கள் சங்கம் இந்த நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மார்க் மூடுவதற்கான கோரிக்கையை விடுத்திருந்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்கும் வகையில் தமிழக அரசு வருகின்ற 5 12 19 26 ஆகிய தேதிகளில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மார்க் இயங்காது என்று தேதி குறிப்பிட்டு அறிவித்துள்ளது.