தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி தீவிரம் அடைந்து வருகிறது. ஆகவே தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் மழை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதில் நவம்பர் மாதம் 9ம் தேதிக்கு பிறகு தான் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு நவம்பர் மாதம் 9ம் தேதிக்கு பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அது புயலாக உருமாறுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆகவே பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.