தமிழ்நாடு முழுவதும் இன்று முழு முடக்கம்…?பெட்ரோல் பங்க் உணவகங்கள் போன்றவற்றை செயல்படாது….?மீறினால் கடும் நடவடிக்கை…?

Photo of author

By Pavithra

தமிழ்நாடு முழுவதும் இன்று முழு முடக்கம்…?பெட்ரோல் பங்க் உணவகங்கள் போன்றவற்றை செயல்படாது….?மீறினால் கடும் நடவடிக்கை…?

Pavithra

கொரோனா தொற்று பரவுதலின் காரணமாக ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆறாம் கட்டமாக, தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளுடனும், தொற்று அதிகமாக உள்ள சென்னை போன்ற மாவட்டங்களில் தளர்வு இல்லாத ஊர் அடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்று வீரியத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இன்று மற்றும் இந்த மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி இன்று முழு ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.இதில் “பால் வின்பனை நிலையங்கள், மருந்தகம்,பத்திரிக்கை, ஊடகங்கள் இயங்க அனுமதி” வழங்கப்பட்டுள்ளது.

இன்று “காய்கறி கடைகள், உணவகங்கள், பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள், உள்ளிட மற்றும் பெட்ரோல் பங்குகள், மதுபான கடைகள்,போன்றவை எதுவும் இயங்காது என்று அரசு அறிவித்துள்ளது.

மேலும் இன்று விதிகளை மீறி வெளியே வருபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக நெடுஞ்சாலைகளில்
பேரிகேட்கள் வைத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களான சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காவலர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று எவரேனும் மக்கள் வெளியே வருகிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.