Ajith kumar Racing:அஜித் குமார் ரேஸில் கலந்து கொள்ளும் காரில் தமிழ்நாடு லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு “குட் பேட் அக்லி” திரைக்கு வர இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் “விடாமுயற்சி”அதே ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும். என படக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள்.
நடிகர் அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமல்லாது பைக் கார் ரேஸ்களில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சர்வதேச கார், பைக் ரேஸ்கள் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும் இந்தியாவில் கார் ரேஸுக்கு என தனி நிறுவத்தை வைத்து இருக்கிறார் அஜித் குமார். “குட் பேட் அக்லி” படம் படப்பிடிப்பு முடிந்த உடன் அஜித் கார் ரேஸ்ஸில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் குமார் கார் ரேஸ் குழுவினர் பயன்படுத்தும் காரில் தமிழ்நாடு SDAT லோகோ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கார் போர்ஷே 911 GT3 RS என்ற ரேஸ் வகையை செர்ந்த கார் ஆகும். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.