DMK: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாகவும், தற்போது ஆளுங்கட்சியாகவும் விளங்கும் திமுக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர தயாரிப்பில் உள்ளது. தொடர்ந்து 7 வது முறையும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டுமென திட்டம் தீட்டும் திமுகவிற்கு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான அமைச்சர்களால் அது நிராசையாக முடியுமோ என்ற பயம் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில், ஊழல் இல்லாத ஆட்சியையும் அரசையும் பார்ப்பது கடினம். அதிலும் திமுக ஆட்சியில் அது அளவுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தற்போது புதிதாக, திமுக அமைச்சரான கே.என் நேரு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையை கவனித்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த துறையில் காலியாக இருந்த 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்று நிரப்பபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் கே.என். நேரு சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி அவருக்கு எதிராக சில ஆதாரங்களை திரட்டினார். இதனை ஆய்வு செய்ய வேண்டுமென அமலாக்கத்துறையினர் தமிழ்நாடு காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய கே.என். நேரு, என்னால் முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படாது என்றும் இது தொடர்பான விசாரணையில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நாங்கள் நிரூபிப்போம் எனவும் கூறியிருக்கிறார். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை தமிழக காவல்துறை உரிய முறையில் விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கூற்று தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் வரும் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவரின் இந்த கருத்து உண்மையாகுமா இல்லையா என்பது இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து தான் தெரியவரும்.

