ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25, 2024
Home Blog

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!!

0

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!!

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்த யாத்திரையில் பேசிய அண்ணாமலை, வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடியே வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கப்போகிறார், குடும்ப அரசியல் மற்றும் ஊழல் ஆட்சியில் இருந்து தமிழகம் மீழப்போகிறது.

மேலும், திமுக கட்சியினரே பாஜகவிற்க்கு தான் ஓட்டு போடுவர், திமுக கட்சியினரே அவர்களை தோற்கடிப்பர்.

511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

திமுகவினரின் திருட்டு மற்றும் ஊழலுக்கு எதிரான ஆடியோக்கள் மற்றும் வீடியோக்கள் தேர்தல் சமயத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

திமுகவினரின் ஊழல்க்கு எதிராக பைல் ஒன்று, இரண்டு என மொத்தம் நான்கு ஆடியோக்கள் முன்பே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!!

0

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறயுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் மிகவும் சூடுப்பிடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக இணை அமைச்சரும், மூத்த தலைவருமான எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார் இந்த செயல் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி.

இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி, அவர் ராஜினாமா செய்திருப்பதால் அந்த பதவி காலியாக இருப்பதாக விரைவில் அறிவிக்கப்படும்.

வருகின்ற 27,28 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் முன்னிலையில் பாஜக வில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலை தற்பொழுதே இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!

0

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில்

பதவி:

*முதுகலை ஆசிரியர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் M.Com with B.Ed., M.Sc in Physics with B.Ed படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)
*Written Exam(எழுத்து தேர்வு)

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 26.02.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் உரிய முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

1 நாளில் படர்தாமரை இருந்த இடம் தெரியாமல் மறைய இந்த பேஸ்ட்டை இப்படி பயன்படுத்துங்கள்!!

0

1 நாளில் படர்தாமரை இருந்த இடம் தெரியாமல் மறைய இந்த பேஸ்ட்டை இப்படி பயன்படுத்துங்கள்!!

படர்தாமரை உருவாகுவது எப்படி:
நமது தோளின் மீது மலேசேசியா பரர் என்ற பூஞ்சையால் இந்த தேமல் படர்தாமரை போன்றவை உருவாகிறது.குறிப்பாக இவ்வகையான அலர்ஜியானது இளப்பருவத்தினரை தான் குறி வைத்து தாக்கும்.அதிகளவு முதுகு முகம் தோல் தொடை போன்ற பகுதிகளில் தான் இவ்வாறான பூஜை தொற்று காணப்படும். இது ஒரு சிலருக்கு தேம்பல் ஆகவும் படர்தாமரையாகவும் மாறிவிடுகிறது.
இந்த படர்தாமரை வந்துவிட்டால் அது சுற்றி இருக்கும் இடத்தில் அரிப்பு எரிச்சல் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இதனால் நாம் ஏதாவது ஒரு அசோகரியத்துடன் இருப்பது போலே தோன்றும். இதிலிருந்து வீட்டு வைத்தியம் முறைப்படி எளிதில் விடுபடலாம்.

படர்தாமரை வராமல் தடுப்பது எப்படி:
நன்றாக கைகளில் துவைத்து வெயில் இருக்கும் இடத்தில் காய வைத்து எடுக்க வேண்டும்.
உள்ளாடைகளை வெயில் இருக்கும் இடத்தில் காய வைப்பது மூலம் அதில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்கும் சில பாக்டீரியாக்களால் கூட இந்த பூஞ்சை தொற்று உண்டாக கூடும்.
அதிக அளவு வேர்வை உண்டாகும் பூஞ்சை தொற்று வரக்கூடும்.
அதனால் அவ்வப்போது தண்ணீர் தொட்டு வியர்வையை துடைத்து விட வேண்டும்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய்
வேப்பெண்ணை 1ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1/2 ஸ்பூன்
மஞ்சள்

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் சிறு துண்டு பாகற்காயை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதில் எடுத்து வைத்துள்ள வேப்பெண்ணை தேங்காய் எண்ணெய் சிறிதளவு மஞ்சள் இவை மூன்றையும் சேர்க்க வேண்டும்.
படர்தாமரை இருக்கும் இடத்தை நன்றாக தண்ணீர் விட்டு துடைத்துவிட வேண்டும்.
பின்பு இந்த கலவையை தினசரி படர்தாமரை உள்ள இடத்தில் நான்கு முறை தடவ வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் ஒரே நாளில் படர்தாமரை பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

உடல் எடையை சட்டுனு குறைக்க பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்கள்!!

0

உடல் எடையை சட்டுனு குறைக்க பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்கள்!!

இப்பொழுது இருக்கும் நவீன காலகட்டத்தில் துரித உணவுகளை அதிகமாக உண்பதால் உடல் பருமனானது அதிகரித்து விடுகிறது. இந்த உடல் பருமனை குறைப்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யவும் மக்கள் யோசிப்பதில்லை. ஆனால் நாம் உண்ணும் உணவு கொண்டு உடல் பருமனை எளிதாக குறைக்க முடியும்.

உடல் பருமனை எளிமையாக குறைப்பது எப்படி:

நாம் தினமும் சரி எடுத்துக் கொள்ளும் தண்ணீர் முதல் உணவு வரை அதில் சிறு சிறு மாற்றத்தை கொண்டு வந்தாலே உடல் பருமனை குறைக்க முடியும்.
அதுதான் நாம் பாரம்பரியமாக பின்பற்றி வரும் உணவே மருந்து கூட ஆகும்.
தினம்தோறும் குடிக்கும் தண்ணீரில் சீரகம் கலந்து பருகும் பொழுது கெட்ட கொழுப்புகள் வெளியேறி உடல் பருமன் குறையும்.
அதேபோல துரித உணவுகளை விட்டுவிட்டு காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

உடல் பருமனை குறைக்கும் பேரிச்சம் பழம்:

பேரிச்சம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது.குறிப்பாக ரத்தத்தின் அளவை அதிகரிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஆனால் இது எவ்வாறு உடல் பருமனை குறைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே பேரிச்சம் பழத்தில் அதிக அளவு வைட்டமின்கள் கால்சியம் போன்றவை நிறைந்து தான் காணப்படும்.

இது உடல் பருமனை குறைக்க உதவும். அதிகளவு உடல் பருமன் இருக்கிறது என நினைப்பவர்கள் காலை அல்லது மாலை வேலைகளில் துரித உணவுகளுக்கு பதிலாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.அதுமட்டுமின்றி பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலில் எந்த ஒரு கொழுப்பும் சேராது.பேரிச்சம்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் பசி தூண்டுவது என்பதே இருக்காது.

இது பசியை கட்டுப்படுத்தக் கூடியது. அதேபோல மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்வதால் அதிலிருந்து விடுபட முடியும்.குடலில் செயல்பாடுகள் சீராக இருக்க இது மிகவும் உதவும்.இது செரிமானம் சீராக இருக்க உதவுவதால் உடல் எடை ஏறுவதில் இருந்து தங்களை பாதுகாக்கும்.

மேலும் பேரிச்சம் பழத்தில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் நாள் முழுவதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவதற்கான ஆற்றலையும் அதிகரிக்கும். குறிப்பாக இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

எலும்பு தேய்மானம் மூட்டு வலி முதுகு வலி ஒரே நாளில் குணமாக வேண்டுமா? அப்போ இந்த ஊட்டச்சத்து பொடியை பயன்படுத்துங்கள்!

0

எலும்பு தேய்மானம் மூட்டு வலி முதுகு வலி ஒரே நாளில் குணமாக வேண்டுமா? அப்போ இந்த ஊட்டச்சத்து பொடியை பயன்படுத்துங்கள்!

இன்றைய உலகில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் எலும்பு சார்ந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். உடல் எலும்புகளுக்கு வலு இல்லையேல் எவ்வித காரியத்தையும் செய்ய இயலாது. எனவே ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளுங்கள். அதனோடு ஊட்டச்சத்து பொடியை தயாரித்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை
2)பருத்தி விதை
3)சோயா விதை
4)பால்
5)நாட்டு சர்க்கரை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் கோதுமை, பருத்தி விதை, சோயா விதை சம அளவு போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற விடவும்.

இவை அனைத்தும் நன்கு ஊறி வந்ததும் தண்ணீரை வடிகட்டி விடவும். பிறகு ஒரு காட்டன் துணியில் இந்த பொருட்களை போட்டு வெயிலில் நன்கு காய விடவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் நாட்டு மாட்டு பால் ஊற்றி சூடாக்கவும். பால் சூடானதும் அரைத்த ஊட்டச்சத்து பொடி 2 தேக்கரண்டி அளவு போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இந்த பாலை ஒரு கிளாஸுக்கு ஊற்றி சுவைக்காக சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும். இந்த பானம் எலும்பு தேய்மானம், மூட்டு வலி, முதுகு வலி அனைத்தையும் முழுமையாக குணமாக்கும்.

5 நாளில் சியாட்டிகா பிரச்சனையிலிருந்து விடுபடலாம்!! இதோ இந்த எளிமையான வீட்டு வைத்தியம் போதும்!!

0

5 நாளில் சியாட்டிகா பிரச்சனையிலிருந்து விடுபடலாம்!! இதோ இந்த எளிமையான வீட்டு வைத்தியம் போதும்!!

சியாட்டிகா என்பது முதுகு தண்டு வடத்தில் இருக்கும் ஒரு நரம்பு ஆகும்.அதாவது நமது முதுகு தண்டுவடம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கால் பாதம் முடியும் வரை இருக்கும் ஒரு நரம்பு மண்டலம்தான் சியாட்டிக்.உடலில் உள்ள மிக நீளமான நரம்பு இது ஒன்றுதான். இந்த நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நம்மால் எழுந்து கூட நிற்க இயலாது.உடலானது மிகவும் சோர்வாக காணப்படும்.

குறிப்பாக அதிகப்படியான பெண்களுக்கு தான் கால்சியம் குறைபாடு குறைவாக இருக்கக்கூடும்.அவ்வாறு 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இந்த சியாட்டிகா பிரச்சனை காணப்படும்.இந்த பிரச்சனையை ஆரம்ப கட்ட காலத்தில் கண்டுபிடித்தால் மிக எளிமையாக சரி செய்து விடலாம்.காலின் பின் பகுதியில் வலி ஏற்பட்டு மரத்துப் போவது போல் காணப்பட்டால் சியாட்டிகா பிரச்சனை என்று நாம் உணரலாம்.

அது மட்டுமின்றி ஒரு சிலருக்கு இடுப்பின் கீழ் வலி காணப்படும் இது சாதாரண வாயு பிடிப்பு என்று தவறாக நினைத்து விடுகிறார்கள்.சியாட்டிகா நரம்பானது மேலிருந்து கீழ் வரை செல்வதால் ஒரு சிலருக்கு இது இழுப்பது போல் கூட வலி காணப்படும். இவ்வாறான வலிகள் ஏதேனும் உணர்ந்தால் சியாட்டிகா பிரச்சினையாக இருக்கலாம் என்று இனி தெரிந்து கொள்ளலாம்.

எப்சோம் உப்பு
இதில் அதிகளவு மெக்னீசியம் சல்பேட் உள்ளதால் இது நரம்பு மண்டலத்திற்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்கும்.
குளிக்கும் வெந்நீரில் இரண்டு கப் அளவு எப்சம் உப்பு சேர்த்து குளித்து வர சியாடிக் பிரச்சனையிலிருந்து சற்று விடுபடலாம்.

ஒத்தடம்:
வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுப்பதால் உள்ளிருக்கும் வீக்கமானது குணமாகும்.

இஞ்சி:
இஞ்சியை டீயாக கூட குடிக்கலாம்.ஏனென்றால் இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் சியட்டிக் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த அருமருந்தாக இருக்கும்.

இதனையெல்லாம் தவிர்த்து பாட்டி வைத்தியம் முறையும் சியாட்டிக் பிரச்சனையில் இருந்து விடுபட கைகொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

கிராம்பு 4
கருப்பு ஏலக்காய் 2
பட்டை
வெல்லம்

செய்முறை:
ஒரு இடிக்கல்லில் எடுத்து வைத்துள்ள கிராம்பு கருப்பு ஏலக்காய் சிறிதளவு பட்டை இவை மூன்றையும் சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ஒன்றை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அது ஒரு கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்து வரும் பொழுது எடுத்து வைத்துள்ள வெள்ளத்தையும் சேர்க்க வேண்டும்.
பின்பு இந்த தண்ணீரை வடிகட்டி பருகலாம்.
இதனை இரவு தூங்குவதற்கு முன் குடிப்பது சியாட்டிகா பிரச்சனைக்கு மிகவும் நல்லது.

உடல் உயரம் அதிகரிக்க இந்த ஒரு பவுடரை பாலில் கலந்து குடிங்க!

0

உடல் உயரம் அதிகரிக்க இந்த ஒரு பவுடரை பாலில் கலந்து குடிங்க!

இன்றைய காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் எடை மற்றும் உயரத்தை அதிகரிக்க விளம்பரங்களில் காட்டும் பவுடர்களை வாங்கி கொடுக்கின்றனர். ஆனால் இதனால் எந்த வித பயணம் இல்லை.

உடல் உயரம் மற்றும் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு ஊட்டச்சத்து பவுடர் தயாரித்து பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)எள்
2)பாதாம்
3)சோம்பு
4)தாமரை விதை
5)கருப்பு உளுந்து

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 கப் பாதாம் பருப்பு போட்டு வறுத்து எடுக்கவும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி எள், ஒரு தேக்கரண்டி கருப்பு உளுந்து, ஒரு தேக்கரண்டி சோம்பு போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு தாமரை விதை 1/2 கப் அளவு போட்டு கருகிடாமல் வறுத்து எடுக்கவும். வறுத்த அனைத்து பொருட்களையும் ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும். பால் நன்கு கொதித்து வந்த பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அரைத்த ஊட்டச்சத்து பொடி 2 தேக்கரண்டி அளவு கலந்து குடிக்கவும். இந்த ஊட்டச்சத்து பவுடர் குழந்தைகளின் உடல் உயரத்தை மளமளவென உயர்த்த உதவும்.

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாக்கும் இந்த மந்திர பானம் பற்றி தெரியுமா?

0

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாக்கும் இந்த மந்திர பானம் பற்றி தெரியுமா?

நவீன உலகில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாரபட்சம் இன்றி அனைவருக்கும் ஏற்படும் பாதிப்பாக சர்க்கரை நோய் உள்ளது. இதை இயற்கை முறையில் குணமாக்குவது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பாகற்காய்
2)வெந்தயம்
3)கொய்யா இலை
4)பப்பாளி இலை
5)கோவை தழை

செய்முறை:-

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் சர்க்கரை நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

முதலில் ஒரு பாகற்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலை, பப்பாளி இலை, கோவைக்காய் இலையை தண்ணீரில் போட்டு அலசி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய பாகற்காய் மற்றும் மூன்று வகை இலைகளை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். காயவைத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கவும்.

அதன் பின்னர் சிறிது வெந்தயத்தை வறுத்து பொடியாக்கவும். அரைத்த இந்த இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த பொடியில் இருந்து 1 1/2 தேக்கரண்டி அளவு போட்டு மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த ட்ரிங்க் ஒருமுறை குடிங்க!

0

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த ட்ரிங்க் ஒருமுறை குடிங்க!

ஒருவருக்கு சளி பாதிப்பு ஏற்பட்டால் அவை எளிதில் குணமாகாது. பலவித தொந்தரவுகளை கொடுத்த பின்னர் தான் சற்று அவை குறையும். இவ்வாறு தேங்கி கிடக்கும் நாள்பட்ட மார்பு சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:

1)சுக்கு
2)கொத்தமல்லி விதை
3)மிளகு
4)துளசி
5)வெற்றிலை
6)தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து மிளகு, கொத்தமல்லி விதை மற்றும் தோல் நீக்கிய சுக்கை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு துளசி 1/4 கைப்படி அளவு, வெற்றிலை 2 துண்டு போட்டு கொதிக்க விடவும். அதனை தொடர்ந்து அரைத்த பொடி 2 தேக்கரண்டி அளவு போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் மார்பு பகுதியில் தேங்கி கிடந்த சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.