இந்த முதல் டாஸ்மார்க் மற்றும் மதுக்கடைகள் அதோடு பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆறு ஆயிரம் மதுக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுப்பு கொடுத்திருக்கின்றது. அவர்களில் ஒவ்வொருவரும் ஆறு அடி தூர இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அதோடு அவர்கள் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும் பார்களில் இருப்பவர்கள் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும். குறைந்தபட்சமாக நாற்பதில் இருந்து 60 வினாடிகளுக்கு ஒரு முறை கைகளை கழுவிக் கொள்ளவேண்டும். கிருமி நாசினிகளை வைத்து அடிக்கடி கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வாய் மற்றும் மூக்கை முழுவதுமாக மூடிக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாநிலம் முழுவதிலும் இருக்கின்ற ஊழியர்கள் அவர்களாகவே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் நலக்குறைவு இருப்பவர்கள் தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட உதவி மையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். பார்களில் பணியாற்றுபவர்கள் துப்புவதற்கு தடை விதிக்கப் பட்டிருக்கின்றது. எல்லோரும் தங்களுடைய கைப்பேசியில் ஆரோக்கிய சேது ஆப்பை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பார்களில் இருக்கின்ற இருக்கைகளில் 50 சதவீதத்தை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அதிகமான கூட்டத்தை அனுமதிக்காமல் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். பார் நுழைவாயிலில் கைகளை சுத்தப்படுத்துவதற்கான கிருமி நாசினிகளை வைத்து கை கழுவ வேண்டும்.
உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே பாருக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க வேண்டும். நோய் அறிகுறி மற்றவர்களை மட்டுமே பாருக்குள் அனுமதிக்கவேண்டும். பார் ஊழியர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும். பார்களின் வளாகத்தில் நுழைவாயிலில் 6 அடி தூரம் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். பார்களில் கொரோனா விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். பார்களின் மேஜை, நாற்காலிகள், போன்றவற்றில் தொற்று ஏற்படாத வகையில் கிருமி நாசினி யை உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டும். மேற்கண்ட கட்டுப்பாடுகளில் மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.