கொரோனாத் தொற்றின் வீரியத்தால் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அமல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, தற்போது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியிருந்தார்.ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்ட்டது.இதேபோன்று ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பின்பற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கொரோனா பரவுதலின் வீரியத்தை கருத்தில் கொண்டு டாஸ்மாக் சங்கங்கள் தாமாகவே முன்வந்து ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று கூறியிருந்தது.தற்போது
இதைத்தொடர்ந்து கடந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வாறு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டிருந்ததோ அதேபோன்று இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.