தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்!

தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்!

பொதுவாக கிரிக்கெட் என்றாலே சிறு குழந்தைகள் முதல் இளவட்டங்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. அப்படி அந்த விளையாட்டில் சிலரை காரணமே இல்லாமல் பலருக்கு பிடிக்கும். அப்படி ஒரு நபர் தான் மகேந்திர சிங் தோனி. இவர் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இவருக்கு முதலில் கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாவிட்டாலும் அவரது விளையாட்டு ஆசிரியரின் தூண்டுதலினால் விளையாட ஆரம்பித்தார்.

பலமுறை கேப்டன் பதவியில் வகித்த மகேந்திர சிங் தோனி கடந்தவருடம் கிரிக்கெட்டை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது பலர் இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இவரை தோனி கூல் என்றும் அழைக்கின்றனர். இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை கொண்டாடி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

தோனி அவர்கள் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். ஆனால் ஒருவர் மட்டும் ஒருபடி மேலே சென்று தோனியின் உருவப்படத்தை தனது கையில் ஒரு ரசிகர் பச்சை குத்தியுள்ளார். அதுவும் அவர் கர்நாடக ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் விஜய நகர் மாவட்டம் கூட்லகியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தோனியின் தீவிர ரசிகர் ஆவார். இந்த நிலையில் தோனியின் பிறந்தநாளையொட்டி ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல பச்சை குத்தும் நிபுணர் சங்கரை வைத்து, அவரிடம் பேசி தனது கையில் தோனியின் உருவப் படத்தை வரைய வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி அவரும் இந்த ரசிகரின் கையில் தோனியின் உருவத்தை தத்ரூபமாக  வரைந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment