ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! அமைதிக்கான வேண்டிய நாள்!!

Photo of author

By Selvarani

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! அமைதிக்கான வேண்டிய நாள்!!

Selvarani

Updated on:

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! அமைதிக்கான வேண்டிய நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மாலை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் சிறிதளவு சலசலப்புடன் மாலைக்கு பின் கலகலப்புடனும் இருக்கும் நாள். நிதி நிலைமை அணுகலமாக உள்ளது.

 

கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது. கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு உடலில் ஒரு வித சோர்வு மற்றும் அசதி வந்து மறையும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.