ரிஷபம் ராசி- இன்றைய ராசிபலன்!! தொலைதூரப் பயணம் உண்டாகும் நாள்!!

Photo of author

By Selvarani

ரிஷபம் ராசி- இன்றைய ராசிபலன்!! தொலைதூரப் பயணம் உண்டாகும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சிறு தூர பயணம் உண்டாகும். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

உத்தியோகம் நிமித்தமாக நீங்கள் எடுக்கும் முடிவுகளால் பயண வாய்ப்புகள் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உறுதியாகும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகளும் கால தாமதமாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் எல்லாம் கலைகட்டி இருப்பதை கண்டு மனம் மகிழ்ந்து போவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில அனுகூலங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள்.

கலைத்துறையை சேர்ந்தவர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.