ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மாற்றங்களால் மனம் மகிழும் நாள்!

0
184
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மாற்றங்களால் மனம் மகிழும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மாற்றங்களால் மனம் மகிழும் நாள். குடும்ப உறவு உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் அருமையான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் மன்னர்களுக்கு எதிர் பாராத ஒரு மாற்றம் நிகழலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! நல்லவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here