ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
284
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் இருந்தாலும் குடும்ப உறவுகளின் பாதிப்புகள் உண்டாகாது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அதி அற்புதமான நல்ல திருப்பத்துடன் நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் அற்புதமாக வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை வந்து அமையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு முயற்சியும் அருமையாக நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ!
Next articleவெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை!