ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி கூடும் நாள்!!

0
163

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி கூடும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி கூடும் நாள் எடுக்கும் காரியங்களை கண்ணும் கருத்துமாக செய்து முடித்தீர்களால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஓய்ந்து அற்புதமான ஒற்றுமை நிலவும். பொருளாதாரம் கிடைக்கும் உத்தியோகத்தின் உயர்வு பெற வேண்டும் என்றால் பாடுபட வேண்டி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் வேண்டும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனக்குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் அது அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleமேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!
Next articleவெந்தயத்தின் இந்த பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அப்புறம் விடவே மாட்டீங்க!