ரிஷபம் ராசி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி காணும் நாள்!!

0
100
#image_title

ரிஷபம் ராசி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி காணும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள். சந்திர பகவான் பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்ப உறவு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும். உபயோகத்தில் முன்னேற்றம் தெரியவரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் சில நேரங்களில் சோர்வாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani