ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும் நாள்!!

Photo of author

By Selvarani

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் உறவினர்கள் வீட்டிற்கு வருவதால் அதன் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

குடும்ப உறவு அற்புதமான பாதையில் செல்லும். பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் வருமானமும் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை அனுகூலமாக உள்ளது. உத்தியோகத்தில் சிலருக்கு பணியிடமாறுதல் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதை கண்டு மணமகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரப்பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.