ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பரபரப்பாக இருக்கும் நாள்!!

0
197

ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பரபரப்பாக இருக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஸ்தானத்தில் சந்திர பகவான் வருவதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். அதிகாலையிலேயே நிறைய வேலைகள் உங்களிடம் வந்து சேர்வதால் எதை செய்வது என்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று அருமையாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தின் அபிவிருத்திக்காக சில முன்னேற்பாடுகளை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைகட்டி இருப்பதைக் கண்டு மணமகிழ்ந்து போவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleமேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகள் அமையும் நாள்!!
Next articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here