ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
141
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குலேயே சந்திர பகவான் இருப்பதால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடம் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகி எரிச்சலை உண்டாக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனைவரையும் அரவணைத்து செல்வது நல்லது.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான முன்னேற்றம் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்காக மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையும் சற்று இழுபறிகிறது என்ற கவலையுடன் காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani