ஆசிரியர்கள் தினம்! தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

Photo of author

By Sakthi

ஜனாதிபதி மாளிகையில் தேசிய நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் 45 பேருக்கு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது.

அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான விருதுக்காக இணையதளம் மூலமாக நடைபெற்ற 3 கட்ட நடைமுறைகள் மூலமாக தமிழகம், புதுவை, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், போன்ற நாடு முழுவதும் இருக்கின்ற 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் தேசிய நல்லாசிரியர்களை கௌரவிக்கும் விதமாக விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரத்தைச் சார்ந்த ராமச்சந்திரன் உட்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார்.