ஏடிஎம்-ற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்;மக்கள் பரபரப்பு?

Photo of author

By Pavithra

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் ஓவர்சியஸ் வங்கியின் ஏ.டி.எம் ஒன்று இயங்கி வருகிறது.இந்த ஏடிஎம் மூலம் மேக்காமண்டபம்,வேர்கிளம்பி,மணலிக்கரை போன்ற 10-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் இந்த ஏ.டி.எம் ஓரிரு வாரங்களிலேயே சேவை நிறுத்தப்பட்டு பூட்டப்பட்டது. இந்த ஏடிஎம் கடந்த மூன்று மாதங்களாகவே செயல்படாமல் இருந்து வந்தநிலையில்,சுற்றுவட்டார பகுதிகள் ஏடிஎம் சேவைக்காக பல கிலோ மீட்டர்கள் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.பொது முடக்கம் என்பதனால் போக்குவரத்தும் இன்றி ஏடி.எம்.மி-ல் பணம் எடுப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர் அந்தப் பகுதி மக்கள்.

இந்நிலையில் இந்த பூட்டப்பட்ட ஏடிஎம்-யை பயன்பாட்டிற்கு கொண்டுவர வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் சார்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.இருந்த போதிலும் எந்த எந்த வித பயனும் இல்லை.

இதனால் செயல்படாமல் பூட்டி கிடந்த இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த ஏ.டி.எம் சேவை மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்தியன் ஓவர்சியஸ் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்களின் கோரிக்கைள் எழுந்துள்ளது.